குடிபடுத்தும் பாடு... ராத்திரியில் துப்பாக்கியால் சுட்டு போலீஸார் சண்டை.. சென்னையில் பரபரப்பு

சென்னை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தற்போது போலீஸ் அதிகாரிகள் குவிந்துள்ளனர். நேற்று இரவு இந்த பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது.
சென்னை புதுப்பேட்டை சந்திரபானு தெருவில் ஒரு விடுதி உள்ளது. இங்கு கடலூரைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் இளமாறன் என்பவரும், ஆயுதப் படைக் காவலர் ஆனந்தகுமார் என்பவரும் தங்கியுள்ளனர். இளமாறன் கோர்ட் பணிக்காக கடலூரிலிருந்து வந்திருந்தார்.
நேற்று இரவு இவர்கள் இருவரும் மது போதையில் வாய்த்தகராறில் இறங்கினர். சண்டை முற்றி இருவரும் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். மேலும் தங்களது துப்பாக்கியை எடுத்தும் அடித்துள்ளனர். அப்போது திடீரென ஆனந்தகுமாரின் துப்பாக்கி வெடித்து, குண்டு இளமாறனின் தொடையில் பாய்ந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அந்த இடம் முழுவதும் போலீஸார் குவிந்தனர். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சில நூறு மீட்டர் தூரத்தில்தான் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications