விஐபிகளுக்கு 'நோ ப்ரீ பாஸ்'... கூட்டத்தோடு கூட்டமா அழகர் ஆத்துல இறங்குறத பாத்துக்கங்கப்பா!

மதுரையில் சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும்முக்கியமானதாகும். இவ்விரு நிகழ்ச்சிகளையும் காண தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவதுண்டு.
வருகிற 23-ந்தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் 25-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியை காண முக்கிய பிரமுகர்களுக்கு இலவச பாஸ் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழங்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
21 முதல் 23 வரை திருவிழா...
அழகர் கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா வருகின்ற 21-ந் தேதி தொடங்குகிறது. ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக சுந்தரராஜ பெருமாள் 23-ந்தேதி மாலை 5 மணிக்கு கள்ளழகர் வேடமிட்டு மதுரையை நோக்கி புறப்படுகிறார்.
ஆற்றில் இறங்குகிறார்...
பல மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்து 25-ந்தேதி காலை 7.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இலவச பாஸ் ரத்தா..
இதுகுறித்து கோவில் இணை கமிஷனர் முத்து தியாகராஜன் கூறும்போது, இந்தாண்டு அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் சுவாமி தரிசனம் செய்ய முக்கிய பிரமுகர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவுபடி இலவச பாஸ் வழங்கப்பட மாட்டாது என்றார்.












Click it and Unblock the Notifications