மாநில அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே சிபிஐக்கு வழக்குகளை மாற்ற வேண்டும்: ஜெயலலிதா

டெல்லியில் இன்று மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் காவல்துறை சீரமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை.
அவரது உரையை சட்ட அமைச்சர் கே.பி.முனுசாமி வாசித்தார். அதில் கூறியுள்ளதாவது:
நிர்வாக சீரமைப்புக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை மாநில அரசுகளின் மீது மத்திய அரசு திணிக்கக்கூடாது.
மாநில அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே சிபிஐக்கு வழக்குகளை மாற்ற வேண்டும்.
மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எழும்போது மத்திய படைகளை, சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி பெறாமல் அனுப்பலாம் என்ற மத்திய அரசின் முடிவை ஏற்றுக்கொள்ளமுடியாது
காவல்துறையை நவீனப்படுத்த நிதி
காவல்துறையை நவீனப்படுத்துவதற்கான நிதியுதவியை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தில், ஒவ்வொரு முறையும் வாக்குறுதி மட்டுமே அளிக்கப்படுவதாகவும், இந்த முறையாவது வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
குற்றங்களை தடுக்க நடவடிக்கை
மேலும், மாநில காவல்துறையினரின் மேம்பாட்டில் தனது அரசு முன்னோடியாகத் திகழ்வதாக கூறியுள்ள ஜெயலலிதா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications