சேலம் அருகே காவலாளியை கொடூரமாக தாக்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி!
சேலம்: ஆத்தூர் வீரகனூர் பேருந்து நிலையம் அருகே ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏடிஎம் மையத்தில் காவலாளியை கொடூரமாகத் தாக்கி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீரகனூர் பேருந்து நிலையம் அருகே 50 மீட்டர் தொலைவில் ஸ்டேட் வங்கி கிளை இருக்கிறது .அங்கு ஏ.டி.எம். மையமும் இருக்கிறது. இப்பகுதியில் எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்கும். இங்கு நேற்று இரவு பெருமாள் எனற காவலாளி பணியில் இருந்தார். நள்ளிரவு நேரத்தில் ஒரு கும்பல் திடீரென ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து பெருமாளை சரமாரியாக தாக்கியது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
பின்னர் அக்கும்பல் ஏடிஎம் மைய சிசிடிவி காமிரா வயரை துண்டித்து கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தனர். ஏ.டி.எம். இயந்திரத்தை நீண்ட நேரமாக உடைக்க முயன்றும் பலன் இல்லாமல் போகவே அக்கும்பல் தப்பி ஓடியது. அந்த வழியே சென்றவர்கள் காவலாளி ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவலாளியின் மூளை வெளியே வரும் அளவுக்கு கொடூரமான ஆயுதங்களால் தாக்கியிருக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications