காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை: மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கான திமுக நிர்வாகிகள் கூட்டம் மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் தலைமையில் நடந்தது.
இதற்காக .திருப்புத்தூர் வந்த ஸ்டாலினுக்கு அண்ணா சிலை அருகே சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் கோட்டையிருப்பில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மாதவன், தென்னவன், ரகுபதி, திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
இக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.2.40 கோடியை ஸ்டாலினிடம் பெரியகருப்பன் வழங்கினார்.
இக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தை இருளில் வைத்துள்ள ஜெயலலிதா தற்போது மத்திய ஆட்சியின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் (பிரதமராகும் திட்டம்) இந்தியாவையே இருளில் மூழ்க வைக்க முடிவு செய்துள்ளார்.
நாடாராளுமன்றத் தேர்தலை விரைவில் சந்திக்க உள்ளோம். அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விழுந்த ஓட்டு சதவீதத்தை பட்டியலிட்டு வரும் காலத்தில் தேர்தலை கவனத்துடன் சந்திக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சரியான தருணத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினோம். இனி காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார்.
மதுரையில் ஸ்டாலின் ஆலோசனை:
முன்னதாக மதுரை வந்த ஸ்டாலின் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணனின் தாயார் ராதா தியாகராஜன் மறைந்ததையொட்டி, அவரது இல்லத்துக்கு சென்று விசாரித்துவிட்டு, அடுத்ததாக முன்னாள் சபாநாயகர் பி.டி.பழனிவேல் ராஜனின் அண்ணன் கமலா தியாகராஜன் மறைந்ததையொட்டி அவரது இல்லத்துக்கு சென்று விசாரித்தார்.
பின்னர் சங்கம் ஹோட்டலில் திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாஜி மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாகவும், மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் 5 பேர் நீக்கம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாகவும் அவர் கட்சியினருடன் பேசினார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications