கருணை மனுவை ஏன் நிராகரித்தீர்கள்?... வீடியோ கான்பரன்சிங்கில் கேள்வி கேட்ட பேரறிவாளன்
Subscribe to Oneindia Tamil

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன், ஆகியோர் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனு கொடுத்தனர். இதை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். தனது கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது ஏன் என கேட்டு பேரறிவாளன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
ஆனால் இந்த கடிதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பதில் தர மறுப்பது ஏன் என்று கேட்டு பேரறிவாளன் மத்திய தகவல் ஆணையருக்கு மனு அனுப்பினார்.
இதையொட்டி வேலூர் ஜெயிலில் உள்ள பேரறிவாளனிடம் மத்திய தகவல் ஆணைய அதிகாரிகள் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications