இலங்கைக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் சி.ஐ.ஏ.: சொல்கிறார் குணதாச அமரசேகர
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. இருப்பதாக தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தமிழகத்துடன் அமெரிக்காவிற்கு பிரத்தியேக உறவுகள் காணப்படுகின்றன. சமீபத்தில் ஹிலாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியிருந்தார். தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் சாதாரண மக்களினால் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கையில் பிளவினை ஏற்படுத்தும் நோக்கில் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் சூழ்ச்சித் திட்டமாக இதனைக் கருத வேண்டும். இந்த போராட்டங்களுக்கு பின்னணியில் அமெரிக்காவின் அமெரிக்காவின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. உள்ளது.
ஜெயலலிதா சிறந்த நடிகை என்ற போதிலும் புத்திசாலி அல்ல. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டவும், தமிழகத்தில் சாதாரண மக்களின் இன உணர்வுகளைத் தூண்டவும் சிலர் முயற்சிக்கின்றனர். சீன, இந்திய எழுச்சி காரணமாக அமெரிக்கா வலுவிழந்து செல்கின்றது. எனவே ஆசிய பிராந்தியத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதனை அமெரிக்கா விரும்புகின்றது.
தமிழகத்தில் தனி ஈழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு குழப்பங்கள் விளைவித்தால் அது அமெரிக்காவிற்கு சாதகமாகவே அமையும் என்றார்.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications