அப்படிப்போடு! "நவீன அம்பேத்கர் ஜெயலலிதா".. இந்திய கம்யூனிஸ்ட் புகழாரம்!
Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிவடைந்த பின்பு வழக்கம் போல விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அளிக்கப்படும் வைப்புத் தொகை ரூ.50 ஆயிரமாகவும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் வழங்கப்படும் வைப்புத் தொகை ரூ.25 ஆயிரமாகவும் அதிகரிக்கப்படும் என்றார்.
இந்த 110 அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கே. லிங்கமுத்து, பெண் குழந்தைகளின் நலனுக்காக அம்பேத்கர் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதுபோல பெண் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து நவீன அம்பேத்கராக முதல்வர் ஜெயலலிதா திகழ்கிறார் என புகழாரம் சூட்டினார்.












Click it and Unblock the Notifications