கொளுத்தும் வெயிலில் வைகோ நடைபயணம்: உடல் நிலை திடீர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி: தமிழ்நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொண்டுள்ளார். கொளுத்தும் வெயிலில் அவர் நடந்து வருவதால் உடல் நிலையில் லேசான பாதிப்பு ஏற்பட்டதாக அவருடன் இருக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை 3-வது கட்ட நடைபயணத்தை வைகோ தொடங்கியுள்ளார். நேற்று காலை கோட்டூர் மலையாண்டிபட்டணத்தில் இருந்து நடந்து வந்த போது கடும் வெயில் கொளுத்தியதால் அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை.

Vaiko

பின்னர் பூவலப்பருத்தியூர் என்ற இடத்தின் வழியாக சென்ற போது திடீரென்று அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனால் அவர் அங்குள்ள ஒரு தென்னந்தோப்புக்குள் சென்று ஓய்வெடுத்தார்.

இதையடுத்து டாக்டர்கள் வரதராஜன், கிருஷ்ணன் ஆகியோர் வைகோ உடல்நிலையை பரிசோதனை செய்தனர். டாக்டர்கள் வைகோவிடம், வயிற்று போக்கு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக தான் உங்களால் நடக்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் நீங்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த ஊர் பெரியவர்கள் வைகோவின் நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் கைகுலுக்கினார்கள்.

அங்கு வந்த சின்ன அம்மணி என்ற பெண்மணி, உடல்நிலை சரியில்லாத நிலையிலும் மக்கள் திருந்தவேண்டும் என்பதற்காக உடல் நிலை சரியில்லாத நிலையிலும் நடக்கின்றீர்கள். நீங்கள் நூறு ஆண்டுகள் நன்றாக இருக்கவேண்டும் என்று வாழ்த்தினார். அவர்களின் வாழ்த்தைக் கேட்ட வைகோ கண்ணீர் மல்க நன்றி கூறிவிட்டு 10 நிமிடம் கழித்து மீண்டும் நடைபயணத்தை தொடர்ந்தார்.

கடந்த 16ம் தேதி தொடங்கிய பயணம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. வழியெங்கிலும் கிராமங்களில் உள்ள மக்கள் வைகோவின் நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+