For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெக்சாஸ் உரத் தொழிற்சாலையில் வெடி விபத்து: 100 பேர் காயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள உரத்தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

டெக்சாஸில் உள்ள வாகோ என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த உரத் தொழிற்சாலையில் புதன்கிழமை மாலையில் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் தீ பரவியதில் ஆலையில் இருந்தவர்கள் சிக்கி காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Texas Blast

வெடிகுண்டு தாக்குதல்

வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வில், உரத் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றும் இடிந்து விழுந்துள்ளது. இதனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில், காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியில் 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

தொழிற்சாலையில் நடந்தது வெடி விபத்தா அல்லது குண்டுவெடிப்பா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

வெடிவிபத்தால், உரத்தொழிற்சாலை தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. தீயினை அணைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 5பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The explosion happened early on Wednesday evening . Many people are reported to be injured and others are trapped in burning buildings after an explosion at a fertiliser plant near Waco in the US state of Texas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X