உயிருக்குப் போராடும் டெல்லி சிறுமி! தொடர் போராட்டங்களால் 144 தடை உத்தரவு!
டெல்லி: டெல்லியில் பலாத்காரத்துக்குள்ளான சிறுமி மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார். சிறுமியை பலாத்காரம் செய்த காமக் கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி டெல்லியில் போராட்டங்கள் வெடித்துள்ளன. . இந்தப் போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு டெல்லியில் நேற்று முன்தினம் 5 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளானார். அதே கட்டிடத்தில் வாடகைக்கு குடியிருந்த 22 வயது பீகார் இளைஞர் மனோஜ்குமார்தான் அந்த சிறுமியை 4 நாட்களாக அடைத்து வைத்து காட்டு மிராண்டித்தனமாக பாலியல் கொடுமை செய்திருக்கிறானர். தற்போது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய அந்த காமக் கொடூரனை கைது செய்த போலீசார் டெல்லிக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். 40 மணி நேரம் சிறுமியை அறைக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறினான். சிறுமி மயக்கம் அடைந்ததால் இறந்து விட்டதாக கருதி தப்பி ஓடி விட்டான். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கிறது என்றும் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறான்.
இந்நிலையில் சிறுமி வழக்கில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் நேற்று போராட்டம் வெடித்தது. போலீஸ் மீது அதிருப்தி அடைந்த பெண்களும், போராட்டக்காரர்களும் டெல்லி போலீஸ் தலைமை அலுவலகம் முன் திரண்டனர். அங்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட பகுதியில் காந்தி நகர் போலீஸ் நிலையம், உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே வீடு ஆகிய இடங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டை இன்று பாஜகவின் மகளிர் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டம் தீவிரமடைவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications