நிலக்கரி ஊழல்- பிரதமர் பதவி விலக பாஜக வலியுறுத்தல்! நாடாளுமன்றம் முடங்கியது!!

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு ஒரு மாத விடுமுறைக்குப்பின் நேற்று தொடங்கியது. டெல்லி சிறுமி பலாத்கார சம்பவம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் ஆகியவற்றால் இரு சபைகளும் முடங்கின. இன்று 2-வது நாளாக பார்லிமென்ட் கூடிய போதும் நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாஜகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிக்கும் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்.
மேலும் சில எம்.பிக்கள் டெல்லி சிறுமி பலாத்கார சம்பவம் மற்றும் ஸ்பெக்ட்ரம் முறை கேடு பற்றியும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் லோக்சபா வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் இதே அமளி நீடிக்க பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் 2 மணிக்கு கூடிய போதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
2வது நாளாக பார்லிமென்ட் முடக்கப்பட்டது குறித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக இன்று காலை பாரதிய ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் எல்.கே. அத்வானி தலைமையில் நடைபெற்றது. இதில் நிலக்கரி ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர், சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications