சென்னையில் திடீர் மழை…வெப்பம் தணிந்தது
சென்னை: சென்னையின் புறநகர்பகுதிகளில் பெய்துவரும் மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் இரண்டு வார காலம் இருந்தாலும் கடந்த ஒருவார காலமாகவே சென்னையில் வெயில் சுட்டெரித்தது. சதமடித்த வெயிலினால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். மாலை நேரங்களில் கடற்கரையிலும், பூங்காக்களிலும் சென்று வெப்பத்தை தணித்தனர். வெயில் கொளுத்தினாலும் அவ்வப்போது மழை பெய்து வெயிலின் கடுமையை குறைத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே 12 மணியளவில் மிதமான மழை தொடங்கியது.

நிதானமாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அம்பத்தூர், கொரட்டூர், பாடி பகுதிகளில் பெய்யும் மழையினால் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியுள்ளது.
கொரட்டூர் பகுதிகளில் லேசாக பெய்த மழைக்கே தெருவெங்கும் தண்ணீர் தேங்கி சகதியாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், சிரமத்திற்குள்ளாகியுள்ளன. எனவே மண் சாலைகளை தார்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே வெப்பச்சலனம் காரணமாகவே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications