ஆக்ஷன் எடுக்க ஜீப்புக்கு டீசல் போடச் சொன்ன திருச்செந்தூர் பெண் எஸ்.ஐ.!
தூத்துக்குடி: மகளை கொடுமைப்படுத்திய மருமகன் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஜீப்புக்கு டீசல் போடுவியா என்று கேட்ட மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன் வியாபாரி தூத்துக்குடி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் இடையன்விளை சவரித்த நாடார் குடியிருப்பைச் சேர்ந்த மீன் வியாபாரி சண்முகம் கலெக்டர் ஆசிஷ் குமாரிடம் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது 2வது மகள் முத்துமாரிக்கும், ஆறுமுகநேரியைச் சேர்ந்த லிங்கம் என்பவரது மகன் மஞ்சுநாதனுக்கும் கடந்த 12.09.2012 அன்று திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது எனது மகளுக்கு 12 பவுன் நகையும், ரூ.25,000 ரொக்கமும் கொடுத்தோம். திருமணத்திற்கு பின் எனது மகள் முத்துமாரியிடம் அவரது கணவர் மஞ்சுநாதன், மாமியார் தமிழ்வாசகம், மாமனார் லிங்கம், அவரது சகோதரர்கள் கார்த்திகேயன்-தேவி, கிருஷ்ணமூர்த்தி-மாரி ஆகியோர் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கொடுக்காத எனது மகளை எனது வீட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டனர். இது குறித்து எனது மகள் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் நாங்கள் கொடுத்த புகாரின்பேரில் மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பாக நாங்கள் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரிடம் கேட்டதற்கு வண்டி(ஜீப்)க்கு டீசல் போடுவியா?, எப்.ஐ.ஆர் போட்டால் நீ என்ன செய்து கிழித்திடுவாய் என்று தரக்குறைவாக பேசி எங்களை திருப்பி அனுப்பிவிட்டார்.
அத்தோடு, மகளிர் போலீசார் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து பெயரளவிற்கு பொருளை வாங்கி எங்களிடம் கொடுத்து எங்களின் கையெழுத்தையும் மிரட்டி வாங்கிக் கொண்டனர். ஏழ்மை நிலையில் நான் வாழ்ந்து வரும் நிலையில், எனது மகள் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்திட தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் புகார் கொடுக்கச் சென்ற எங்களை தரக்குறைவாக நடத்திய மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications