பெரம்பலூர் அருகே திருடனை அடித்துக் கொன்ற கிராமத்தினர்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள கிராமத்தில் திருட வந்த நபரை ஊர் மக்கள் அடித்துக் கொன்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் எறையூர் மாரியம்மன் கோவில் அருகே அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடக்கிறார் என்று கல்பாடி (வடக்கு) கிராம நிர்வாக அலுவலர் அருள்தாஸ் (30) மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்தவர் துறைமங்கலத்தைச் சேர்ந்த பனையடியான் மகன் வடிவேல் (40) என்பது தெரிய வந்தது. வடிவேல் தனது நண்பர்கள் 3 பேருடன் பைக்கில் அந்த கிராமத்திற்கு திருட வந்துள்ளார். அப்போது கிராமத்தினர் அவர்களை சுற்றி வளைத்துவிட்டனராம். அப்போது வடிவேலுவின் நண்பர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம். சிக்கிய வடிவேலுவை கிராம மக்கள் தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிர் இழந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து அருள்தாஸ் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் வேல்முருகன் (33), சேகர் மகன் பால்ராஜ் (20), ராமச்சந்திரன் மகன் ராஜாராம் (25), வேலாயுதம் மகன் முருகேசன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications