செல்போன் கோபுரத்தால் ஆரோக்கியம் கெட்டதாக ரூ. 50 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு
டெல்லி: டெல்லியில், தனது வீட்டின் மாடியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டதால் தனது மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது. அதனால், தனக்கு 50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி மூதாட்டி தாக்கல் செய்துள்ள மனு குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கிழக்கு சந்தர் நகரை சேர்ந்தவர் சீதாதேவி (70). இவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்: எனது வீட்டின் மொட்டை மாடியில் தனியார் செல்போன் நிறுவனம், தனது கோபுரத்தை அமைக்க அனுமதி கேட்டது. என் மகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், கோபுரத்திலிருந்து வெளியாகும் கதிர் வீச்சுகள், மகளின் உடல்நிலையை பெரிதும் பாதிக்கும் என்பதால் இதற்கு நான் மறுத்தேன்.
ஆனால், தொலைத் தொடர்பு ஓழுங்குமுறை ஆணையமும், மாநகராட்சியும் அனுமதியளித்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் செல்போன் கோபுரத்தை அந்த நிறுவனம் அமைத்தது
உடல்நிலை மோசம்...
இதனால், என் மகளின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. செல்போன் கோபுரத்திலிருந்து வெளி யாகும் கதிர்களால், மகளின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்களும் தெரிவித்துள்ளனர்.
20 லட்சம் மருத்துவச் செலவு...
இதுநாள் வரை மகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 20 லட்சத்துக்கும் மேல் செலவழித்துள்ளேன். எனினும், மகளின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி, வாழ்வில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டாள். செல்போன் கோபுரத்தை அகற்ற வேண்டும் என்று நான் பலமுறை கோரிக்கை விடுத்தும் அந்த நிறுவனம் அகற்றவில்லை.
நடவடிக்கை இல்லை...
இது தொடர்பாக கிழக்கு டெல்லி போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனது வீட்டருகே கோயில், அரசு பள்ளி, சமூதாய கூடம்,. மார்கெட் வளாகம் ஆகியவை உள்ளன. இங்கு அதிகளவில் மக்கள் கூடுகின்றனர். செல்போன் கோபுரத்தால் இவர்களின் உடலுக்கு ஆபத்து ஏற்படும்.
அகற்ற உத்தரவிட வேண்டும்...
அதனால், அந்த செல்போன் கோபுரத்தை உடன் அகற்ற உத்தரவிட வேண்டும். அத்துடன், என் மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்காக ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்...
இந்த மனு, நீதிபதி ராஜிவ் ஷக்தார் முன் விசாரணைக்கு வந்தது. இது பற்றி விளக்கம் கேட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்), மாநகராட்சி, செல்போன் கோபுரம் அமைத்துள்ள நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications