கோமாவில் இருக்கும் சரப்ஜித் சிங்கை பார்க்க குடும்பத்தார் இன்று பாகிஸ்தான் பயணம்

1990ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். இந்த வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங்(49) கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கருணை மனுக்களை நீதிமன்றங்களும், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரபும் நிராகரித்தனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சரப்ஜித் சிங் சக கைதிகளால் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் கோமாவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரது மூளையில் 60 சதவீதம் சேதம் அடைந்துள்ளதாகவும், அவரது முதுகெலும்பு உடைந்துவிட்டதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்ப்ரீத் கௌர், மகள்கள் பூனம், ஸ்வபன்தீப் கௌர் மற்றும் அவரது தங்கை தல்பீர் கௌர் ஆகியோருக்கு பாகிஸ்தான் அவசர விசா வழங்கியுள்ளது. இதையடுத்து அவர்கள் இன்று லாகூர் சென்று கோமாவில் இருக்கும் சரப்ஜித்தை பார்க்கவிருக்கின்றனர்.
ஜனநாயகம் மீது நம்பிக்கையில்லா நாடு பாக்.: குலாம் நபி ஆசாத்
ஜனநாயகம் மீது நம்பிக்கையில்லா நாடு பாகிஸ்தான் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங்கிற்கு நேர்ந்த கொடுமை துரதிர்ஷடவசமானது. பல உயிர்களை பலி கொண்ட மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமான ஒருவரை நம் நாட்டு சிறையில் வைத்திருந்தோம். அவரை தூக்கிலிடும் வரை அவரது பாதுகாப்புக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அவரின் வழக்கறிஞர்களின் கட்டணத்தையும் இந்திய அரசே ஏற்றுக் கொண்டது.
இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் மனிதாபிமானத்திற்கும் பாகிஸ்தானின் ஜனநாயகம் மற்றும் மனிதாபிமானத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் இது தான். எதிரியையும் மனிதாபிமானத்துடன் நடத்தும் நமது பண்டைய கால பாரம்பரியத்தை நாம் இன்றும் கடைபிடித்து வருகிறோம். ஆனால் பாகிஸ்தானில் ஜனநாயகத்திலும், மனிதாபிமானத்திலும் நம்பிக்கை இல்லை என்பது சரப்ஜித் சிங் விவகராத்தின் மூலம் தெரிகிறது என்றார்.
சரப்ஜித்தை இந்தியா கொண்டு வர நடவடிக்கை: குர்ஷித்
கோமாவில் இருக்கும் சரப்ஜித் சிங்கை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சிறையில் கைதிகள் தாக்கப்பட்டு கோமாவில் இருக்கும் சரப்ஜித் சிங்கை பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்க இந்தியாவில் இருந்து மருத்துவர்களை அனுப்பி வைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. மேலும் சரப்ஜித்தை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய-பாகிஸ்தான் கூட்டு நீதித்துறை குழுவில் உள்ள ஓய்வு பெற்ற இந்திய நீதிபதிகள் கே.எஸ்.கில், எம்.ஏ.கான் ஆகியோர் விரைவில் லாகூர் சிறைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவிருக்கின்றனர். மேலும் மற்ற இந்திய கைதிகளின் நிலை குறித்து கேட்டறியவுள்ளனர். முன்னதாக அவர்கள் நேற்று கராச்சி சிறைக்கு சென்று அங்கு இருக்கும் இந்திய கைதிகளை சந்தித்து பேசினர். அவர்கள் கைதிகளின் ஆவணங்கள் மற்றும் அவர்களின் விடுதலைக்காலம் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications