திருச்சி அருகே காவிரியில் மண்ணில் புதைந்து தாய்- மகள் உள்பட 4 பேர் பலி
திருச்சி: திருச்சி அருகே காவிரி ஆற்றில் மண்ணில் புதைந்து தாய்- மகள் உள்பட 4 பேர் பலியாயினர்.
திருச்சி மாவட்டம் பெருகமணி அருகே உள்ள நங்கவரம் கிராமத்தில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமானோர் இன்று காலை தீர்த்தக்குடம் எடுத்தனர்.
இதற்காக காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுப்பதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் பெருகமணி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துவிட்டு குடங்களில் தீர்த்தம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென உமாதேவி (35), அவரது மகள் தீபா (13), இவர்களது உறவினரான சிறுவன் ஜீவானந்தம் (7), பிரவீணா (22) உள்பட 5 பேர் மணலில் புதைந்தனர்.
மணலில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாமல் தண்ணீரில் மூழ்கினர். அங்கு கூடியிருந்தவர்கள் அவர்களை மீட்டு முதலில் பெருகமணி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பணியில் டாக்டர்கள் யாரும் இல்லை. இதையடுத்து அவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி உமாதேவி, தீபா, ஜீவானந்தம், பிரவீணா ஆகிய நால்வரும் பலியாயினர். இன்னொரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications