பெரம்பலூரில் ஷோரூமில் பணத்தோடு 2 புதிய கார்களையும் லவட்டிய காஸ்ட்லி திருடர்கள்!
சென்னை: ஷோரூமில் இருந்து 2 புதிய கார்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான புதிய கார் விற்பனை ஷோரூம் ஒன்று உள்ளது.நேற்று இரவு வழக்கம் போல் நிறுவனத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். இரவு காவலாளி தங்கவேல் மட்டும் பாதுகாப்பு பணியில் இருந்தார்.
அதிகாலை அங்கு வந்த 3 மர்ம நபர்கள் காவலாளி தங்க வேலுவை நாற்காலி ஒன்றில் கட்டிபோட்டு அவர் வைத்திருந்த ஷோரூம் சாவியை எடுத்து நிறுவனத்தை திறந்து அங்கு நிறுத்தி வைத்திருந்த 2 புதிய கார்களை வெளியில் எடுத்துள்ளனர்.
மேலும் அங்கிருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம், 2 கம்ப்யூட்டர்கள், 1 எல்.சி.டி. டிவி மற்றும் சில பொருட்களை எடுத்து கொண்டு காரையும் கடத்தி சென்றனர்.பின் காவலாளி தங்க வேல் நிறுவன மேலாளருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் பெரம்பலூர் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கார்களை கடத்தி சென்ற மர்மநபர்கள் பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் அருகே 2 கார்களையும் நிறுத்தி விட்டு பணத்துடன் தப்பி சென்று விட்டனர்.ரோந்து சென்ற போலீசார் அந்த கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தப்பி ஓடிய மர்ம நபர்ளை போலீசார் தேடி வருகின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications