குடிச்சிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா மீது ஆக்ஷன் எடுங்க சார்: கலெக்டரிடம் சிறுமி மனு
சேலம்: குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 7ம் வகுப்பு மாணவி சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
சேலத்தை அடுத்த குப்பனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு. டீக்கடையில் வேலை செய்கிறார். அவரது மனைவி மணிமேகலை. அவர்களுக்கு பௌமிகா(12) என்ற மகளும், 11 வயதில் 2 மகன்களும் உள்ளனர்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 7ம் வகுப்பு படிக்கும் பௌமிகா வந்திருந்தார். அவர் மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
குடிப்பழக்கம் உள்ள என் அப்பா, அடிக்கடி வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவார். அவர் அம்மாவை அதிகம் அடிக்கிறார். போன புதன்கிழமை எல்லாரையும் அடித்து விட்டு இரும்புக் கம்பியால் என் அம்மாவை அடித்து, வீட்டுக்குள் போட்டு பூட்டி விட்டுச் சென்றார். பக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் அம்மாவை மீட்டு சேலம் மருத்துவமனையில் சேர்த்தனர். எங்க அம்மாவுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே என் அப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
மனுவை படித்துப் பார்த்த கலெக்டர் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி.யிடமும் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications