பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும்: சுஷ்மா ஸ்வராஜ்

தனி தெலுங்கானா கோரி சன்சத் யாத்ரா-தில்லி சலோ என்ற பெயரில் தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவில் உள்ள தலைவர்கள், தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர். நேற்றைய போராட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டு பேசுகையில், தெலுங்கானா தொடர்பான மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த மசோதாவை பாஜக ஆதரிக்கும். மத்தியில் பாஜக அரசு அமைந்தால், 100 நாட்களில் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்றார்.
இதில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி, சமூக ஆர்வலரும் உலக ஆர்ய சமாஜ் கவுன்சில் தலைவருமான ஸ்வாமி அக்னிவேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பிரிவினர், அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டு நுழைவுவாயில் அருகே தடையை மீறி போராட்டம் நடத்தினர். மற்றொரு பிரிவினர் பார்லிமென்ட் நுழைவு வாயில் அருகே உள்ள சௌக் சந்திப்பிலும், வேறு சிலர் பார்லிமென்ட் சாலை சந்திப்பிலும் திரண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications