தர்மபுரியில் 2 டாஸ்மாக் கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
தர்மபுரி: தர்மபுரி அருகே 2 டாஸ்மாக் கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அருகே உள்ள இண்டூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே 2895 என்ற எண் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் யாரோ பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் மதுக்கடை தீ பிடித்து எரிந்தது.
அப்போது அருகில் இருந்த திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் பார்த்து சத்தம் போட்டு கொண்டு வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
மே தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து செவ்வாய்கிழமை (30-ந் தேதி) இரவு 10 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று அதிகாலையில் மர்மநபர்கள் சில டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் பாம் வீசியுள்ளனர்.
இதேபோல் பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையிலும் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அந்த கடையும் தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் குறித்தும் இண்டூர், மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications