ஒகேனக்கல்லில் நண்பரை காப்பாற்றும் முயற்சியில் 4 பெங்களூர் இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பலி
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் மூழ்கி பெங்களூரைச் சேர்ந்த 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
பெங்களூர் கோரமங்களா ஏஜே காலனியைச் சேர்ந்த 14 இளைஞர்கள் ஒகேனக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்தனர்.
ஒகேனக்கல் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் வருவதால் தண்ணீர் அதிகம் வரும் பகுதியைத் தேடிச் சென்றுள்ளனர் இவர்கள்.
ஒகேனக்கல் அருவியிலிருந்து சிறிது தொலைவில் உள்ள கூடுதுறை மணல்திட்டு பகுதிக்குச் சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஜெகதீஷ் என்ற இளைஞர் நீச்சல் தெரியாமல் ஆழமானப் பகுதிக்குச் சென்று சிக்கிக் கொண்டார். அவரது அலறல் சப்தம் கேட்டு உடனிருந்த நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.
இதில், நாகேஷ் (25), விஜி (26), ராஜீவ் (25), நந்தா (22) ஆகிய நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று ஜெகதீஷை காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் மூழ்கினர்.
ஆனால், மற்ற இளைஞர்களால் ஜெகதீஷ் காப்பாற்றப்பட்டு கரைக்கு தூக்கி வரப்பட்டார். தகவலறிந்து, தீயணைப்பு வீரர்களும், ஒகேனக்கல் போலீஸாரும் விரைந்து வந்து மீட்புப் பணியை விரைவுபடுத்தினர்.
இதுதொடர்பாக, ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications