ராமதாஸை குண்டாஸ்ல போடுங்க… அரசுக்கு கோரிக்கை வைத்த தேமுதிக எம்.எல்.ஏ
புதுக்கோட்டை: அப்பாவி மக்களிடையே சாதி மோதலை தூண்டி விடும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தே.மு.தி.க. கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் தே.மு.தி.க சார்பில் மே தின பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில், சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட அக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் பார்த்தசாரதி பேசியதாவது:
தமிழகத்தில் பாமக வன்முறையை கையில் எடுத்து அரசியல் செய்து வருகின்றது. இதை உடனே அடக்கவில்லை எனில் வரும் காலத்தில் பலரும் இதே போல செய்ய முயற்சி செய்வார்கள்.
கடந்த வாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தேமுதிக தலைவர் விஜயகாந்தினை சந்தித்து ஒரு சி.டி.யையும், இரண்டு புகைப்படங்கயும் கொடுத்தார். அந்த சிடியை பார்த்தால் உண்மை புரியும். பாமக நாடகம் வெளியே வரும்.
உண்மையிலேயே ஒரு காலனியில் இருந்த ஆறு குடிசைகளை எரித்திருக்கிறார்கள். அதே போன்று கள்ளக்குறிச்சியில் ஒருத்தரை அடித்தே கொலை செய்துள்ளனர். இப்படி ஒரு ஜாதி அரசியலை செய்து கொண்டிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
உண்மையிலேயே ராமதாஸுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருந்திருந்தால் தனது மகனுக்கு நீர் பாசனத்துறை அமைச்சர் பதவி வாங்கி கொடுத்திருக்க வேண்டும். ஏன் சுகாதாரத்துறையை வாங்கி கொடுத்தார்.
வன்னியர்கள் அதிகமிருக்கும் விருத்தாசலத்தில் நின்று தான் விஜயகாந்த் வெற்றி பெற்றார். சாதி அரசியல் என்கிற பெயரில் அப்பாவி மக்களை பழிவாங்கும் ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications