வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள்: சென்னை போலீஸ் எச்சரிக்கை!
சென்னை: சென்னை நகரில் ஓடும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை விதிமுறைப்படி மாற்றி அமைத்துக் கொள்ளாவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் ஓடும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், இருப்பது தெரிய வந்தது. மோட்டார் வாகன சட்டப்படி நம்பர் பிளேட்டுகள் இருக்க வேண்டும். நம்பர் பிளேட்டின் நிறம், பிளேட்டின் அளவு, எழுத்து மற்றும் எண் ஆகியவை மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்றியே வைத்திருக்க வேண்டும்.
போக்குவரத்து மற்றும் வர்த்தக ரீதியாக பயன்படும் வாகனங்கள் மஞ்சள் நிற பிளேட்டில், கறுப்பு நிற எழுத்துக்களை கொண்டதாக இருக்கவேண்டும். போக்குவரத்து மற்றும் வர்த்தகம் அல்லாத வாகனங்கள் வெள்ளை நிற பிளேட்டில், கறுப்பு எழுத்துக்களை கொண்டு அமைய வேண்டும். எழுத்துகள் தெளிவாக இருக்க வேண்டும். நம்பர் பிளேட்டில் வேறு அடையாளங்கள் எதுவும் இருக்க கூடாது. அடுத்த ஒரு வாரத்திற்குள் வாகன ஓட்டிகள் தங்களது நம்பர் பிளேட்டுகளை உரிய விதிமுறைகள்படி மாற்றி அமைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார் அவர்.












Click it and Unblock the Notifications