தூத்துக்குடி-நெல்லை 4 வழிச்சாலை டோல்கேட் வசூல்-வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை
தூத்துக்குடி: தூத்துக்குடி-நெல்லை நான்குவழிச்சாலை டோல்கேட் வசூலுக்கு தடை விதிக்ககோரி வியாபாரிகள், பொதுமக்கள் டோல்கேட்டை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடியையும், நெல்லையையும் இணைக்கும் வகையில் கடந்த 2010ம் ஆண்டு நான்குவழிச்சாலை அமைeli-க்கும் பணிகள் 350 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் துவங்கப்பட்டது.
ரஷ்ய நாட்டை சேர்ந்த டிரான்ஸ்ட்ராய் என்ற தனியார் நிறுவனம் இப்பணிகளை மேற்கொண்டுள்ளது. நெல்லை கே.டி.சி நகரில் இருந்து தூத்துக்குடி பைபாஸ் வரையுள்ள 45 கிலோ மீட்டர் தூரமானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலைப்பணிகள் முற்றிலுமாக நிறைவடைவதற்கு முன்பாகவே நெல்லை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள தட்டப்பாறை விலக்கில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கடந்த மாதமான ஏப்ரல் 5ம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனால், புதுக்கோட்டை, தட்டப்பாறை, கூட்டாம்புளி, சாயர்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள இந்த டோல்கேட்டை அகற்றக்கோரி புதுக்கோட்டை சுற்றுவட்டார வியாபாரிகள் இன்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து, வியாபாரிகள் சங்கத்தலைவர் பீட்டர், சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் பொதுமக்கள் டோல்கேட்டை முற்றுகையிட முயன்றனர்.
தகவல் அறிந்த போலீசார் ரூரல் டி.எஸ்.பி நாராயணன், தாசில்தார் ஆழ்வாரம்மாள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டோல்கேட் வசூல் குறித்து கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், நான்குவழிச்சாலை பணிகள் முற்றிலுமாக நிறைவடைவதற்கு முன்பாக வாகனங்களுக்கு சுங்க வரிவசூல் செய்வதற்கு கலெக்டர் உடனடியாக தடை விதிக்கவேண்டும். இல்லாதபட்சத்தில் மதிமுக சார்பில் வாகனஓட்டிகள், பயணிகள் மற்றும் கிராமமக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் அறிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications