பாமக வன்முறையால் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் பாதிப்பு- கோடிக்கணக்கில் இழப்பு
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாவட்டங்களில் பாமகவினர் நடத்தி வரும் தொடர் வன்முறைச் சம்பவங்களால் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. தினசரி கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வட மாவட்டங்கள் பலவற்றில் அரசுப் பேருந்துகள் தொடர்ந்து குறி வைத்துத் தாக்கப்படுகின்றன. கல்வீச்சு நடத்தப்படுகிறது. தீவைப்பும் தொடர்கிறது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை தினசரி ரூ. 25 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறதாம். அங்கு தினசரி ரூ. 65 லட்சம் டிக்கெட் கட்டணம் மூலம் வசூலாகுமாம். ஆனால் தற்போது வன்முறை காரணமாக வசூல் பெருமளவில் சரிந்துள்ளது. இரவு நேர பஸ் போக்குவரத்து ரத்து உள்ளிட்டவை இதற்குக் காரணமாகும்.
ஒரு மாவட்டத்திலேயே இந்த அளவுக்கு நஷ்டம் என்பதால் வட மாவட்டங்களில் உள்ளி பிற போக்குவரத்துக் கழகங்களும் இதே அளவிலான நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாமக தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலைச் செய்யக் கோரியும் விருத்தாசலத்தில் கடந்த சனிக்கிழமை கடையடைப்பு நடைபெற்றது.
ஜெயங்கொண்டம், மீன்சுருட்டியில் ஞாயிற்றுக்கிழமை கடையடைப்பு நடைபெற்றது. செந்துறை, மாத்தூர், பொன்பரப்பி ஆகிய பகுதிகளில் இன்று முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் இன்று பாமகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
அரியலூரில் இருந்து செந்துறை வழியாக குழுமூர், இரும்பிலிக்குறிச்சி, பரணம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், மாத்தூர் போன்ற பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டத்தில் இருந்து கடந்த 5 நாட்களாக செந்துறைக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரியலூரில் இருந்து செந்துறைக்கு கடந்த 3 நாட்களாக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடையடைப்பு மற்றும் பேருந்து போக்குவரத்து முற்றிலும் தடை பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications