கர்நாடக வெற்றிக்கு ராகுலின் 'கடின உழைப்பே' காரணமாம்: மன்மோகன் சிங்ஜி சொல்கிறார்!!

கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன்சிங், கர்நாடகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு கடினமாக உழைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தான் முன்னிலை வசித்தார். இந்த வெற்றிக்காக கர்நாடகாவில் சிறப்பாக பணியாற்றிய காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடகத்தில் ஏற்பட்ட தோல்வி என்பது பாஜகவின் சித்தாந்தத்துக்கான தோல்வியாகும். இந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே பாஜக நிராகரிப்பட்டதற்கான காரணம் தெரியும். நாட்டில் ஊழல்தான் மிகப் பெரிய பிரச்சனை. இந்த ஊழலை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்றார்.
நிலையான ஆட்சி தருவோம்- ப.சி.!; பாஜகவுக்கு இன்னிங்ஸ் தோல்வி- கமல்நாத்!!:
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி நிலையான ஆட்சியை அளிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மற்றொரு மத்திய அமைச்சரான கமல்நாத்தோ, கர்நாடகாவில் நடைபெற்ற மேட்சில் பாஜகவுக்கு இன்னிங்ஸ் தோல்வி என்று வர்ணித்திருக்கிறார்.
கர்நாடக சட்டசபையில் கருத்துக் கணிப்புகளின்படியே காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங், நாட்டின் மிக பெரிய பிரச்சனையாக ஊழல் இருந்து வருகிறது. பாஜகவின் ஊழலுக்கு தேர்தல் மூலம் மக்கள் பாடம் கற்றுக் கொடுத்து விட்டனர். கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தம் தோல்வி கண்டுவிட்டது. ஊழலை ஒழிக்க அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றார்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கூறுகையில், கர்நாடக வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. யார் முதல்வர் என்பதை எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவெடுப்பர் என்றார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடகாவில் நிலையான ஆட்சியை காங்கிரஸ் அளிக்கும் என்றார். அதே நேரத்தில் மத்திய அமைச்சர் கபில்சிபலோ, நரேந்திர மோடியை முன்வைத்து பாஜகவை விமர்சித்திருக்கிறார். "கர்நாடகத்தில் நரேந்திர மோடியின் மேஜிக் என்பது எடுபடவில்லை. தேர்தல் முடிவுகள் மோடி ஒரு ஜீரோ என்பதை நிரூபித்திருக்கின்றன என்பது கபில்சிபல் கருத்து.
இதேபோல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், கர்நாடகாவில் மேட்ச் முடிந்துவிட்டது. பாஜகவுக்கு இன்னிங்ஸ் தோல்வி ஏற்பட்டிருக்கிறது. இப்போது அந்த கட்சி பந்து சரியில்லை.. பேட் சரியில்லை..பிட்ச் சரியில்லை என்று குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications