அமளி, துமளியால் லோக்சபாவில் 93 மணிநேரம் வீணடிப்பு: ஒன்னும் உருப்படியா நடக்கல
டெல்லி: நேற்றுடன் முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் லோக்சபாவில் நிலக்கரி ஊழல், ரயில்வே ஊழல் மற்று 2ஜி விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 92 மணிநேரம் 40 நிமிடங்கள் வீணாகியுள்ளது.
லோக்சபாவின் பட்ஜெட் கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்ட கூட்டத் தொடர் ஆகியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடரை அடுத்துதற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் தான் அதிகப்படியான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிலக்கரி ஊழல், ரயில்வே ஊழல் மற்றும் 2ஜி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை பெரும்பாலான நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. அப்படி ஒத்தி வைக்கப்பட்டதால் எந்த பணியும் செய்யாமல் 92 மணிநேரம் 40 நிமிடங்கள் வீணாகியுள்ளது.
ராஜ்யசபாவிலும் ஒன்றும் பெரிதாக பணிகள் நடந்துவிடவில்லை. ராஜ்யசபாவில் மொத்தம் 83 மணிநேரம் தான் பணியாற்றியுள்ளனர்.

18ல் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்
லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 18 மசோதாக்களில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை நிதி மசோதாக்கள். வேலை இடத்தில் பாலியல் தொந்தரவு குறித்த சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

ஏப்ரல்-மே-இல் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை
லோக்சபாவில் 94 மணிநேரம் மற்றும் 42 நிமிடங்கள் மட்டுமே பயனுள்ளதாக இருந்துள்ளது. அதுவும் பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தான் பணியாற்றியுள்ளனர். கடந்த மாதம் துவங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டத்தில் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை.

கேள்வி நேரமும் கம்மி தான்
லோக்சபாவில் தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் வெறும் 23 சதவீத நேரம் தான் கேள்வி நேரம் நடந்தது. ராஜ்யசபாவில் இந்த சதவீதம் 30 ஆக உள்ளது. லோக்சபாவில் 37 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜ்யசபாவில் 49 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications