டெல்லியில் 12 ஆம் வகுப்பு மாணவி சுட்டுக்கொலை!
டெல்லியில் வீட்டிலிருந்த 12 ஆம் வகுப்பு மாணவியை மர்ம நபர்கள் சிலர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.கே. புரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி, விடுமுறையை ஒட்டி தெற்கு டெல்லியின் முனிர்கா பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்தார்.
அப்போது தனது கூட்டாளி ஒருவனுடன் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அம்மாணவியை சுட்டுக்கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
துப்பாக்கியால் சுடப்பட்டதும் அம்மாணவி உடனடியாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தபோது அந்த மாணவியின் அத்தை அங்குதான் இருந்துள்ளார். ஆனாலும் கொலையாளி யார் என்பது குறித்து இன்னும் அடையாளம் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications
