சகோதரனால் கற்பழிக்கப்பட்ட பெண்... போலீஸ் வழக்குப் பதிவு செய்யாததால் தற்கொலை
குவாலியர்: குவாலியலிர் 32 வயதுப் பெண்ணை அவரது கூடப் பிறந்த அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கூறியும் போலீஸார் வழக்குப் பதிவு செய்யாததால் மனம் உடைந்து போன அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட பெண் தனது 30 வயது தங்கையுடன் குவாலியரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு அவரது அண்ணன் லக்கான் பதாம் வீட்டுக்கு வந்துள்ளார். தன்னுடன் சொந்த வீட்டுக்கு வந்து விடுமாறு இருசகோதரிகளையும் கூப்பிட்டுள்ளார் பதாம். ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர்.
இதநால் கோபமடைந்த பதாம், தனது தங்கையை கட்டாயப்படுத்தி கற்பழித்து விட்டார். இந்தக் கொடுமையைத் தடுக்க முடியாமல் இன்னொரு தங்கை கதறி அழுதது மேலும் கொடுமையானது.
பின்னர் இரு சகோதரிகளும் போலீஸ் நிலையம் சென்று நடந்ததைக் கூறி புகார் கொடுத்தனர். ஆனால் போலீஸார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். எப்ஐஆர் போட மறுத்து விட்டனர். மேலும் இரு சகோதரிகளையும் அசிங்கமாகவும் திட்டி விமர்சித்துள்ளனர். இதனால்தான் மனம் உடைந்து பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக தற்போது விசாரணைக்கு மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications