ஆயிரக்கணக்குல ஓட்டு வாங்கிட்டோம்ல… டெபாசிட் இழந்தும் மார்தட்டும் அதிமுக
பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், ஐந்து இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க., அத்தனையிலும் டெபாசிட்டை இழந்து சாதனை படைத்திருக்கிறது! அவர்கள் வாங்கியது வெறும் 4 எண்ணிக்கை அளவிலான வாக்குகள் மட்டுமே.
தமிழர்கள் அதிகமாக வசிக்கக் கூடிய 5 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதிமுக போட்டியிட்டது. தமிழக அமைச்சர்களும், அ.தி.மு.க. ஆதரவு நடிகர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களுக்கு படுதோல்வியே பரிசாகக் கிடைத்தது. அவர்களால் டெபாசிட்டைக் கூட காப்பாற்ற முடியவில்லை.
ஆயிரக்கணக்கில்தான்
காந்தி நகரில் போட்டியிட்ட மாநில அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தி 3196 வாக்குகளும், ராஜாஜி நகரில் போட்டியிட்ட கே.முனுசாமி 1660 வாக்குகளும், நரசிம்ம ராஜா தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரன் 1001 வாக்குகளும், ஹனூர் தொகுதியில் போட்டியிட்ட ரவி 2370 வாக்குகளும், கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட்ட அன்பு 2052 வாக்குகளும் மட்டுமே பெற்றனர்.
இப்படி நான்கு இலக்க எண்ணிக்கை அளவிலான வாக்குகளை பெற்றும் கொஞ்சமும் கலங்காமல் போனதடவைக்கு இந்த தடவை பரவாயில்லைங்க என்கின்றனர். போன முறை நூத்துக்கணக்குல தான் ஓட்டு இருந்துச்சு. இப்ப ஆயிரக் கணக்குல வாங்கிட்டோம்ல" என்று மார் தட்டுகிறார்கள் கர்நாடகாவில் வசிக்கும் அம்மா கட்சிக்காரர்கள்.
எம்.ஜி.ஆர் காலத்தில்
''எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கர்நாடகாவில் அ.தி.மு.க பல இடங்களில் வெற்றி பெற்று அம்மாநில சட்டமன்றத்திற்குள் நுழைந்து தமிழர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறது. அவருக்கு பிறகு, 1994 ஆம் ஆண்டு கூட ஒரு இடத்தை பிடித்தது. ஆனால் இம்முறை டெபாசிட்டை கூட வாங்க முடியவில்லை.
தேசிய அரசியலில் அக்கறை காட்டும் ஜெயலலிதா கர்நாடகத்தில் இருக்கும் தமிழ் வாக்காளர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாயாவதி போல ஜெயலலிதாவும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால் குறைந்தது 3 இடங்களாவது கிடைத்திருக்கும் என்கிறார்கள் கர்நாடகா பத்திரிகையாளர்கள்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications