பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டுவிட்டால் தமிழகத்தின் மின்தேவை பூர்த்தியாகிவிடும் என்று சொல்லப்பட்டு வந்தாலும் இலங்கைக்கு கடல்வழியே கூடங்குளம் மின்சாரத்தைக் கொண்டு செல்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக 2010ஆம் ஆண்டே இலங்கை மின்சார சபையும் இந்திய பவர் கிரிட்டும் ஒப்பந்தம் போட்டுவிட்டன. இத்திட்டம் 2014ஆம் ஆண்டு முடிவடைந்து செயல்படத் தொடங்கும் என்று இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.
கூடங்குளத்தில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு கேபிள் வழியே மின்சாரம் கொண்டு செல்லப்படும். இதில் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலடி கேபிள் பதிக்கப்படும். அதாவது தமிழகத்தின் ராமேஸ்வரம் வரை தரைவழி கேபிளும் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை கடலடி கேபிளும் பதிக்கப்பட இருக்கிறது. இப்படி கடலடியே கேபிள் அமைக்கப்படும் போது சர்ச்சைக்குரிய ராமர் பாலமும் தகர்க்கப்பட இருக்கிறது. ஏற்கெனவே சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் எனப்படுகிற மணல் திட்டுகளை தகர்க்க கடும் எதிர்ப்பு வரும் நிலையில் ஓசையின்றி இலங்கைக்காக 'ராமர்' பாலம் தகர்க்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது....இது தொடர்பாக போராட்டக் குழுவினர் தொடர்ந்தும் எச்சரித்து வந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக இருப்பதால் 'கடல்வழி' இந்திய மின்சாரத்துக்காக காத்திருக்கிறது இலங்கையின் தலைமன்னார்!
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications