ரூ.24 கோடி சம்பளம் வேண்டாம், 15 கோடி போதும்- 5வது ஆண்டாக விட்டுக்கொடுத்த அம்பானி
மும்பை: தொடர்ந்து 5வது வருடமாக தனது சம்பளமாக ஆண்டுக்கு ரூ. 15 கோடி மட்டுமே பெற்று வருகிறார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி.
இதன் மூலம் அவர் ரூ. 24 கோடி சம்பளத்தை தொடர்ந்து 5வது வருடமாக விட்டுக் கொடுத்துள்ளார்.
கடந்த 5 வருடமாகவே இப்படித்தான் குறைந்தஅளவிலான சம்பளத்தை தொடர்ந்து பெற்று வருகிறார் முகேஷ் அம்பானி. நாட்டின் பொருளாதார நிலையை முன்னிட்டு அவர் எடுத்தமுடிவு இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

24 கோடி சம்பளத்திதற்குத் தகுதியானவர்
முகேஷ் அம்பானிக்கு வருடத்திற்கு ரூ. 24 கோடி சம்பளமாக தரலாம்என்பது ரிலையன்ஸ் நிறுவன பங்குதாரர்கள் அனுமதித்த தொகையாகும்.

15 கோடி மட்டுமே பெறுகிறார்
ஆனால் கடந்த 2008ம் ஆண்டு முதல் தனது சம்பளமாக வருடத்திற்கு ரூ. 15 கோடி மட்டுமே பெற்று வருகிறார் முகேஷ். அதை அவர் உயர்த்தவில்லை. தொடர்ந்து 15 கோடிதான் வாங்கி வருகிறார்.

ரூ. 38 கோடி வரை தர ஷேர் ஹோல்டர்கள் ஒப்புதல்
இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், முகேஷ் அம்பானி வருடத்திற்கு ரூ. 38.93 கோடி சம்பளம் பெறத் தகுதியானவர். ஷேர்ஹோல்டர்களும் அதை ஒப்புக் கொண்டுள்ளனர். அதை விடக் குறைவாக பெறுவதாக இருந்தால் ரூ. 25 கோடி சம்பளம் தரலாம் என்றும் சம்மதித்துள்ளனர்.

முகேஷ் அம்பானி விரும்பவில்லை
இருப்பினும் முகேஷ் அம்பானி ரூ. 15 கோடியை மட்டுமே தொடர்ந்து 5வது ஆண்டாக பெற்று வருகிறார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சீர்குலைவு
பொருளாதார சீர்குலைவு உலகையே உலுக்கி வந்தநிலையில் பொருளாதார சிக்கண நடவடிக்கையாக தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முன்வந்தார் முகேஷ் அம்பானி என்பது நினைவிருக்கலாம்.

ரிலையன்ஸ் ஊழியர் சம்பளம் ரூ. 5179 கோடி
ரிலையன்ஸ் நிறுவனத்தில் 2012-13ம் ஆண்டு ஊழியர்களின் ஊதியத் தொகையாக மட்டும் ரூ. 5179 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு அது ரூ. 3955 கோடியாக இருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications