டிவி நிகழ்ச்சியால் வந்த வினை... இளைஞர் அடித்து, கழுத்தை அறுத்துக் கொலை
கொடைக்கானல்: திருச்சியைச் சேர்ந்த இளைஞரை சிலர் கடத்திச் சென்று சரமாரியாக அடித்தும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து உடலையும் எரித்து விட்டனர். இந்த வழக்கில் தற்போது போலீஸில் 5 பேர் சரணடைந்துள்ளனர். டிவி நிகழ்ச்சி ஒன்று தொடர்பாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
திருச்சி உறையூரை சேர்ந்த முருகானந்தம். சில நாட்களுக்கு முன்பு கடத்தி வரப்பட்டு கொடைக்கானல் வனப்பகுதியில் கழுத்தை அறுத்து, எரித்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சரவணன், மணிவண்ணன், சுதா, முருகானந்தத்தின் தாய் பாப்பாத்தி, தந்தை கந்தசாமி ஆகியோர் சரணடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது...
2012 டிசம்பர் 31ம் தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில், கணவர் சரவணனுடன், சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும், முருகானந்தத்துடன் சேர்ந்து வாழ போவதாகவும் சுதா கூறியிருந்தார். இதற்கு முருகானந்தமும் சம்மதம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கணவனை விட்டு பிரிந்த சுதா, தனது 2 மகன்களுடன் கருமண்டபத்தில் தனியாக வீடு எடுத்து, வசித்து வருகிறார். இந்த நிலையில் மே 1ம் தேதி, காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கதவை தட்டியுள்ளார். சுதா கதவை திறந்தவுடன், அவரை தள்ளி தாக்க முயன்றவுடன் கதவை வேகமாக பூட்டி விட்டார்.
இதைப் பார்த்து வீட்டிற்குள் படுத்திருந்த முருகானந்தம் வெளியே வந்து, சத்தம் போட்டுள்ளார். அப்போது வாசலில் இருந்த 5 பேர், முருகானந்தத்தை தாக்கி, காரில் இழுத்துப்போட்டு அடித்துள்ளனர். தலையில் தாக்கியுள்ளனர். மயக்கமடைந்த முருகானந்தத்தை காரில் கடத்தினர்.
பெரியகுளம் கொண்டு வந்த இவர்கள், கொடைக்கானல் வனப்பகுதியில், கழுத்தை அறுத்து எரித்துள்ளனர். உடலையும் வீசி விட்டுப் போய் விட்டனர்.
டிவி நிகழ்ச்சியை பார்த்து, திருச்சியில் உள்ள சிலர், தங்கள் குடும்பத்தை கேவலமாக பேசியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து முருகானந்தத்தை கொலை செய்ததாகவும், சுதாவின் தம்பிகள் சரவணனும், மணிவண்ணனும் வாக்குமூலம் தந்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications