அடமானத்தில் மூழ்கிப் போன நிலம்.. மீட்கக் கோரி கலெக்டரை அணுகிய மூதாட்டி
தூத்துக்குடி: அடமானம் வைத்த நிலத்தை மீட்டுத்தரவேண்டும் என்று வயதான பெண்மணி ஒருவர் தூத்துக்குடி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள எல்லப்பன்நாயக்கன்பட்டியை சேர்ந்த நாகலட்சுமி பங்கேற்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது மகளின் திருமணத்திற்காக கடந்த 1993ம் ஆண்டு எனது கணவர் பேச்சிநாயக்கர் எங்கள் ஊரைச்சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவரிடம் 6.27சென்ட் நிலத்தை 10ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்ட நிலையில் நிலத்தை மீட்பதற்காக நவநீதகிருஷ்ணனிடம் சென்று கேட்டபோது அவர் ஒரு லட்சரூபாய் கொடுத்தால் தான் நிலத்தை ஒப்படைக்கமுடியும் என்று சொல்லிவிட்டார். இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வறுமையில் நான் வாடும் நிலையில் அடமானம் வைத்த எனது நிலத்தை மீட்டுத்தரவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
நாகலட்சுமியின் மகள், மருமகன் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்துவிட்டனர். அவர்களது குழந்தைகள் இருவரையும் நாகலட்சுமி தான் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications