ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: பதறியடித்து ஓடும்போது மாரடைப்பால் மூதாட்டி மரணம்
தோடா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பயத்தில் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த மூதாட்டி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா பள்ளத்தாக்கில் உள்ள சோட்டி கிராமத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்படி பயத்தில் ஓடி வந்த 61 வயது நசீமா பேகத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பதர்வா பள்ளத்தாக்கில் இன்று அதிகாலை 1.28 மணி, 1.30 மணி மற்றும் 1.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.3 மற்றும் 5.0 ஆக பதிவாகி இருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications