உயிர்த் தோழியை மணக்க விரும்பிய மாணவி: மறுத்ததால் கத்திகுத்து
பிவானி: ஹரியானா மாநிலத்தில் 17 வயது மாணவி ஒருவர் தன்னுடைய தோழியை மணக்க ஆசைப்பட்டுள்ளார். தோழி மறுத்ததால் அவரை கத்தியால் குத்திய மாணவி கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம், சன்வார் கிராமத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் 17 வயது சரிகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன்னுடன் படிக்கும் கமலாவுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 3 ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்துள்ளார். அவர்கள் இருவரும் பிளஸ் 1 முடித்துள்ளனர். இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்புக்கு செல்லவிருக்கின்றனர்.
இந்நிலையில் கமலாவிடம் சரிகா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். இதைக் கேட்ட கமலா அதிர்ச்சி அடைந்து இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சரிகாவை அழைத்து கண்டித்துள்ளனர். அப்படியும் சரிகா கமலாவின் வீட்டுக்கே சென்று தன்னை மணக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் கமலா மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சரிகா கத்தியை எடுத்து தனது தோழியை குத்தினார். உடனே கமலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கமலாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சரிகாவை கைது செய்தனர். சரிகா மாணவி என்பதால் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications