ஐபிஎல் சூதாட்டம்: சென்னையைச் சேர்ந்த மேலும் 10 புக்கீகளுக்கு 6 தனிப்படை போலீசார் வலை

தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து டெல்லியில் உள்ள சில தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக இதுவரை டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லட்சக் கணக்கில் பணம், லேப்டாப்கள், செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் 9 அணிகளிலுமே சூதாட்டத்தில் ஈடுபட்ட வீர்ரகள் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சூதாட்டத்தல் கோடிக் கணக்கில் பணம் புழங்கப்பட்டிருப்பதும், அதில் கணிசமான தொகை கிரிக்கெட் வீரர்களுக்கு சென்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் 25 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று டெல்லி போலீசார் சந்தேகிக்கின்றனர். தாங்கள் சந்தேகப்படும் வீரர்களை அவர்கள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
சந்தேகப் பட்டியலில் உள்ள 25 வீரர்களில் 6 பேர் தாங்கள் விளையாடிய போட்டிகளில் எல்லாம் சூதாட்டத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் அந்த 6 வீரர்கள் விரைவில் கைதாகலாம் என்று தெரிகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து கொண்டே சூதாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 10 தரகர்களை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தரகர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.
மேலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 6 தரகர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் தீர்மானித்துள்ளனர். அவர்களை நாளை தங்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications