தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி

புதுவையில் ராஜீவ் நினைவு ஜோதி யாத்திரை வழியணுப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது,
புதுவை மக்கள் காங்கிரஸ் மீதும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். ராஜீவ் காந்தி தான் பிரதமராக இருக்கையில் இந்தியாவை வல்லரசு நாடாக்க பாடுபட்டார். அவருடைய பதவி காலத்தில் புதிய கல்வி கொள்கை, தொழில் மற்றும் அறிவியல் கொள்கைகள் கொண்டு வரப்பட்டன.
தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்பதில் ராஜீவ் காந்தி முனைப்பாக இருந்தார். அவருடைய காலத்தில் அஸ்ஸாம், மிசோரம், பஞ்சாப் மாநிலங்களில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது. மேலும் இலங்கையில் தீவிரவாதத்தை ஒடுக்க அமைதிப் படையை அங்கு அனுப்பி வைத்தார். இது தவிர இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கப்பல் மூலம் உணவு பொருட்களை அனுப்பி வைத்தார். அந்த உணவு பொருட்களை வாங்க இலங்கை ராணுவம் முன்வராதபோது அவற்றை விமானம் மூலம் தமிழர்களின் பகுதியில் போடச் செய்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தால் நாம் அவரை இழந்தோம்.
தீவிரவாதத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் ஒரு கூட்டம் தமிழகம் மற்றும் புதுவையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில் திரைப்பட இயக்குனர் சீமான் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரினார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் புகைப்படத்தை பிரசுரித்து கூட்டம் நடத்த அவர் அனுமதி கோரினார். அந்த கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. அரசின் செயல் நியாயமானது.
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரன் என்கின்றனர். அவர் ஒரு கோழை. பெண்கள், சிறுவர்கள் மற்றும் அப்பாவி மக்களை போரில் கேடயமாக பயன்படுத்தியவர் ஒரு வீரனா? ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்றபோது ராணுவ வீரரால் தாக்கப்பட்டார். அந்த தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பினார்.
வெற்றியோ, தோல்வியோ போரை முன் நின்று நடத்துபவர் தான் வீரன், பதுங்கிக் கொண்டவர்கள் அல்ல. சீமான் தன்னுடைய கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதி யாசின் மாலிக்கை அழைத்து வந்து பேச வைத்துள்ளார். தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றை தூண்டிவிடுபவர்கள் தேச துரோகிகள். பலமுறை சிறைக்கு சென்ற சீமான் மீண்டும் சிறைக்கு செல்ல விரும்புகிறார். தமிழக அரசின் வழக்குக்கு பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் வைக்க வேண்டும். நக்சலைட்டுகளின் தீவிரவாதத்தையும், அசாம் தீவிரவாதத்தையும் ஒடுக்கியுள்ளோம்.
எங்களை பொறுத்த வரை சீமான் போன்றோர் சுண்டைக் காய்கள். இந்தியாவில் இருந்து கொண்டு நம் நாட்டுக்கே எதிராக செயல்படுபவர்களை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications