பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் அல்லிநகரைச் சேர்ந்த சங்கையா மகன் சரவணன்(35). போலீஸ்காரர். அவருக்கும் தேன்மொழி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆயுதப்படையில் இருந்த போது சரவணன் தேன்மொழியை காதலித்து மணந்தார். அவர்களுக்கு தேவிப்பிரியா(12) என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு சரவணன் பழனி தாலுகாவில் போலீஸ்காரராக வேலை பார்த்தார். அதன் பிறகு அவர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். காவல் நிலையத்திற்கு செல்ல வசதி கருதி தனது மனைவி, மகளுடன் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார்.
தேன்மொழி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நூலகத்தில் வேலை பார்க்கிறார். தேவிப்பிரியா தேனியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி 6ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் முதல் சரவணன் விடுப்பில் இருந்தார். இந்நிலையில் தேன்மொழி மகளை அழைத்துக் கொண்டு நேற்று உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது கதவு உட்புறமாக பூட்டியிருந்தது. கதவைத் தட்டியும் சரவணன் திறக்கவில்லை.
நெடுநேரம் ஆகியும் சரவணன் கதவைத் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டுக்குள் சரவணன் மயக்க நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தாலுகா போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்த விவரம் வருமாறு,
சரவணனுக்கும், ஒரு பெண் எஸ்.ஐ.க்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சரவணன் தனது கள்ளக்காதலிக்கு ரூ.60,000 வரை செலவு செய்துள்ளார். இது குறித்து அறிந்த தேன்மொழி சரவணனை கண்டித்ததோடு, இது குறித்து தனது குடும்பத்தாரிடம் கூறப் போவதாக தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சரவணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications