20 அடியாக சரிந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்.. குறுவை சாகுபடி என்னவாகும்?
சென்னை: மேட்டூர் அணையில் 17 ஆண்டுகளுக்குப்பின் 20 அடிக்குக் கீழே நீர்மட்டம் சரிந்துள்ளதால் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பருவமலை பொய்த்ததன் காரணமாகவும், காவிரி நீரை தர கர்நாடகா மறுத்ததாலும் மேட்டூர் அணை வேகமாக வரண்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசன கால்வாய் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காக, கடந்த சில நாட்களாக விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால், திங்கட்கிழமை மாலை முதல் விநாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அதே நேரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், அணைக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 49 கன அடியாக இருக்கிறது. மொத்த இருப்பு 4.06 டி எம் சி நீர் மட்டுமே உள்ளது.
20 அடியாக குறைந்தது
கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 20 அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததாலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு போன்றவை வறண்டு போனதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூன் 12ல் அணை திறப்பு
வழக்கமாக ஜூன் 12ம் தேதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இல்லாதது, டெல்டா மாவட்ட பாசன விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழையை நம்பி
அதே சமயத்தில் பருவ மழை தொடங்கினாலும், கர்நாடகாவில் உள்ள அணை நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு உபரி நீர் வந்து சேரும் நிலை உள்ளது.
குறுவை சாகுபடி மேட்டூர் அணை திறப்பு
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் செப்டம்பர் மாதத்தில் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு அணை முற்றிலும் வறண்டு விட்டது. எனவே இந்த ஆண்டு குறுவை சாகுபடியும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள். பருவமழை கைகொடுத்தால் மட்டுமே டெல்டா விவசாயம் என்பது சாத்தியமாகும் நிலை உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications