கேன்ஸ் திரைப்பட விழாவில் ரூ.14 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் திருட்டு
உலகில் உள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது முறையாக ரூ.14 கோடி மதிப்பிலான வைர நகை திருடு போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள திரை நட்சத்திரங்கள் கொண்டாடும் இந்த விழாவில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நகைக்கடை நிறுவனம் ஒன்று, நகைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வைரம் பதித்த பிளாட்டினம், தங்க ஆபரணங்களை அணிந்த அழகிகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், டைட்டானிக் கதாநாயகன் லியானார்டோ டி காப்ரியோ, ஷாரோன் ஸ்டோன், பாரிஸ் ஹில்டன் போன்ற ஹாலிவுட் முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
நகை கண்காட்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர்கள், நட்சத்திர விடுதி ஊழியர்கள், என 80 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாரிஸ் நகர காவல்துறையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலத்த பாதுகாப்பையும் மீறி ரூ. 14 கோடி மதிப்புள்ள வைர நெக்லெசை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாரிஸ் நகர காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கிய முதல் வாரத்தில், இதேபோன்று ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகை திருட்டுப் போனது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
