’டி.எம்.எஸ் மறைவு, தமிழ் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு’: ரோசைய்யா

இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
பழம்பெரும் சினிமா பின்னணி பாடகர் பத்மஸ்ரீ டி.எம்.சவுந்தரராஜன் மறைவு செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தனது சிம்மக்குரலால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட டி.எம்.சவுந்தரராஜன், பெரும்பாலான கதாநாயகர்களுக்காக பாடும்போது அவர்களது குரல் போல அப்படியே பாடுவதில் கைதேர்ந்தவர்.
அவரது பக்திப்பாடல்கள் உணர்வு மிக்கதாகவும், இதயத்தை வருடும் வகையிலும் இருக்கும். அந்த பாடல்கள் கேட்பவரின் செவிகளில் ரீங்காரமிடும். அவரது பாடல்கள், பக்தி உலகுக்கு அப்படியே அழைத்துச் சென்றுவிடும்.
இசை உலகில் அவருடைய 60 ஆண்டுகால நீண்ட அனுபவத்தில் தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தென்னிந்திய இசை உலகில் டி.எம்.சவுந்தரராஜனின் பாடல்கள் தனி முத்திரை பதித்துள்ளன.
அவரது மறைவு தமிழ்த்திரை உலகிற்கு குறிப்பாக தமிழ் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications