பீகாரில் பள்ளி ஆசிரியரை உயிருடன் எரித்துக் கொன்ற சக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்
புர்னியா: பீகார் மாநிலத்தில் பள்ளி ஆசிரியரை சக ஆசிரியர்கள் சேர்ந்து உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் புர்னியா மாவட்டம் மாரங்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் ரஞ்சித் குமார்(40). நேற்று காலை பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு முன்பு ரஞ்சித் குமாரை சக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் சேர்ந்து கழிவறைக்கு தூக்கிச் சென்று அங்கு அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.
உடல் முழுவதும் தீ பரவியவுடன் ரஞ்சித் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கதிஹார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிர் இழந்தார்.
இந்த கொலைக்கான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரை தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications