'நம்பர் ஒன்' கைதி ஸ்ரீசாந்த...!
Subscribe to Oneindia Tamil

ஜூன் 4ம் தேதி வரை ஸ்ரீசாந்த்தை சிறையில் அடைக்க நேற்று டெல்லி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவரும், இன்னும் இரு கிரிக்கெட் வீரர்களான அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோரும் திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு முதலாவது சிறையில் ஸ்ரீசாந்த் அடைக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக மும்பையில் வைத்து ஸ்ரீசாந்த்தை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் போலீஸ் காவலில் இருந்து வந்தார். விசாரணைக்குப் பின்னர் நேற்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து திஹார் சிறையின் லேட்டஸ்ட் விஐபி கைதியாக மாறியுள்ளார் ஸ்ரீசாந்த்.












Click it and Unblock the Notifications