பஞ்சாபில் மாணவிகளிடம் சில்மிஷம்: பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட், தலைமை ஆசிரியர் மாற்றம்
சன்டிகர்: பஞ்சாபில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள மகிந்தர்கஞ்சில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் மகேஷ் குமார் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்துமாறு மாநில கல்வி அமைச்சர் சிகந்தர் சிங் மலுகா வட்ட கல்வி அதிகாரி நபாவுக்கு உத்தரவிட்டார். நபா விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பித்தார். அதன் அடிப்படையில் மலுகா மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார்.












Click it and Unblock the Notifications