கற்பழிப்புகளைத் தடுக்க பிரா விளம்பர பெண் பொம்மைகளைத் தடை செய்க... புத்திசாலி அரசியல்வாதிகள்!
மும்பை: கற்பழிப்புகள், ஈவ் டீசிங் போன்ற குற்றச் செயல்கள் அதிகரிக்க கடைகளில் உள்ளாடை விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பெண் பொம்மைகள்தான் காரணம். இதைப் பார்த்துதான் பலரும் கெட்டுப் போகின்றனர். எனவே இந்த பொம்மைகளைத் தடை செய்ய வேண்டும் என்று மும்பை அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக சிந்தித்துப் பேசியுள்ளனர்.
மேலும், பிளாஸ்டிக் பெண் பொம்மைளை கடைகளில் பயன்படுத்துவதற்குக் தடை விதிக்கவும் மும்பை மாநகராட்சிக் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தீர்மானத்தை பாஜக கவுன்சிலர் ரித்து தவதேதான் கொண்டு வந்தார் . அவர் கூறுகையில், பிரா, பேண்டீஸ் போன்றவற்றை விளம்பரப்படுத்த பெண் பிளாஸ்டிக் பொம்மைகளை கடைகளில் வைக்கின்றனர். அவை உண்மையில் கற்பழிப்புகளைத் தூண்டும் வகையில் உள்ளன. இளைஞர்களின் மனங்களை இவை கெடுத்து விடுகின்றன. எனவேதான் இவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று நான்கோரிக்கை தீர்மானம் கொண்டு வந்தேன்.
இதேபோல டிவி, பத்திரிக்கை போன்றவற்றில் வெளியாகும் பிரா உள்ளிட்ட உள்ளாடைகளுக்கான விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும் என்றும் ரித்து கூறினார்.
ஆனால் இப்படிப்பட்ட யோசனைகள் முட்டாள்தனமானவை, கேலிக்கூத்தானவை என்று மும்பை மக்கள் விமர்சிக்கின்றனராம். ஒரு பொம்மையால்தான் இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று கூறுவது முட்டாள்தனமானது என்று அவர்கள் கூறுகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications