இப்போதைக்கு எதுவும் கேட்காதீங்க... சேந்தமங்கலம் சாந்தி

தேமுதிகவிலிருந்து 6வது அதிருப்தி எம்.எல்.ஏவாக நேற்று உருவெடுத்தார் சாந்தி. முதல்வர் ஜெயலலிதாவை நேற்று கோட்டையில் சந்தித்து மனு கொடுத்தார்.
நீல நிற பட்டுப் புடவை அணிந்து முகம் நிறைய மகிழ்ச்சியுடன் முதல்வரைச் சந்திக்க வந்திருந்தார் சாந்தி. சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது தொகுதி மக்களின் கோரிக்கை குறித்து முதல்வரை சந்தித்து நிறைவேற்றி தருமாறு மனு கொடுத்தேன். இந்த மனுவை முதல்வர் அம்மா கனிவுடன் பரிசீலிப்பதாக கூறினார். அதற்கு நன்றி தெரிவித்தேன்.
கடந்த 2 ஆண்டாக சிறப்பாக ஆட்சி நடத்தி 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சிக்கு எனது சார்பிலும், தொகுதி மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்தேன் என்றார்.
சரி நீங்க வந்தது உங்க கட்சித் தலைவருக்குத் தெரியுமா, இனியும் தொடர்ந்து தேமுதிகவில் இடம் பெற்றிருப்பீர்களா என்று செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். ஆனால் எதற்கும் பதிலளிக்க மறுத்து விட்டார் சாந்தி.
அத்தனை கேள்விகளுக்கும் அவர் அளித்த பதில், தொகுதி பிரச்சினை குறித்து மனு கொடுக்கத்தான் வந்தேன். கொடுத்து விட்டேன். அம்மா கவனிப்பதாக கூறியுள்ளார். இதைத் தவிர வேறு எந்தக் கேள்விக்கும் நான் பதிலளிக்க இயலாது என்று கூறி விட்டு காரில் ஏறிப் புறப்பட்டு்ப போய் விட்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications