Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆழ்கடல் மீன் பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்: தடைகாலம் முடிவடைந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஆண்டு தோறும் வங்காளவிரிகுடா கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கத்திற்கென மீன்பிடி தடைகாலம் விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மீன்பிடித் தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இதனால், நேற்று நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:-

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள வங்காளவிரிகுடா கடல் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதிக்கு ஏப்ரல்-15 முதல் மே-29 வரையும், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூர் வரை உள்ள அரபிக்கடல் பகுதியிலுள்ள மேற்கு கடற்கரை பகுதிக்கு ஜூன்-15 முதல் ஜூலை-31-ந்தேதி வரை உள்ள 45 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கப்படுவது வழக்கம்.

பொதுவாக கிழக்கு கடற்கரையான வங்காளவிரிகுடா கடலோர பகுதிகளில் அக்னிநட்சத்திரம் என்ற கத்திரிவெயில் காலங்களில் தான் மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இதனால் இந்த காலகட்டத்தில் ஆழ்கடலில் இயந்திரபடகுகளில் சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் மீன்வலைகள், படகுகள், இயந்திரங்கள் பழுதுபார்த்து தயார்நிலைக்கு கொண்டுவந்தனர்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள வங்காளவிரிகுடா கடல் பகுதியில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. இந்த தடைகாலத்தில் கட்டுமரம், பைபர் படகுகளில் 20 கிலோ மீட்டர் கடல்பகுதியில் சென்று மட்டும் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மாறாக விசைப்படகுகள், இழுவை கப்பல்களில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீன்பிடி தடைகாலங்களில் மீன்சந்தைகளில் மீன்வரத்து குறைந்து விலையும் அதிகரித்து காணப்பட்டது. சென்னை போன்ற மாநகரங்களில் மீன்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர்.

இவர்களுக்கு தடை காலங்களில் அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசைப்படகுகளில் கடலில் சென்று மீன் பிடிக்கின்றனர். தடைகாலம் நேற்று நிறைவடைந்ததால் நேற்று நள்ளிரவு முதல் அனைத்து மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்க மகிழ்ச்சியுடன் செல்ல தொடங்கினர்.

சென்னை காசிமேடு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவர்களும் நேற்று நள்ளிரவு மீன் பிடிக்க சென்றனர். இதனால் இன்னும் சில நாட்களில் மீன் வரத்தும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க செல்பவர்கள் ஒரு வாரகாலம் வரை ஆகும் என்பதால் மீன் வரத்து அதிகரிப்பதும், விலை குறைவதும் ஒருவார காலம் வரை ஆகலாம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+